உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்

மேலும் சிகரம் வைத்தால் போல, துட்டகாமணி பற்றி எழுதும் பொழுது, இருபத்தி இரண்டாவது அத்தியாயம் காமனி ஜனனம் என்ற பகுதியில், [CHAPTEE XXII / THE BIRTH OF PRINCE GAMANI] ‘துட்டகாமணியின் தாய், எல்லாளனுடைய வீரர்களில், முதல் வீரனுடைய கழுத்தை வெட்டிய கத்தியைக் கழுவ உதவிய நீரைக் குடிக்க வேண்டும் என்றும், அதுவும் வெட்டுண்ட தலையை மிதித்துக் கொண்டே, அதைக் குடிக்க வேண்டும் என்று விரும்பினாள் என்றும்

‘ [and then she longed to drink the water that had served to cleanse the sword with which the head of the first warrior among king Elara’s warriors had been struck off, and she longed to drink it standing on this very head] ‘

ராணியின் மகன் தமிழர்களை அழித்து ஒன்று பட்ட அரசாட்சி அமைத்ததும் தர்மம் செழிக்கச் செய்வான்’ என்று குறி சொல்வோர் கூறினர் என்றும்

[the king asked the soothsayers. When the soothsayers heard it they said : ‘The queen’s son, when he has vanquished the Damilas and built up a united kingdom, will make the doctrine to shine forth brightly’] பெருமையுடன் கூறுகிறார்?

பின் சில காலங்களின் பின், தன் மகன் இருவரையும் ஒரு முறை சோதித்து பார்க்க விரும்பி, தாய் “நாங்கள் தமிழர்களோடு எக்காலத்திலும் போரிட மாட்டோம் என்ற எண்ணத்தோடு இந்த உணவைச் சாப்பிடுங்கள்” எனக் கூறி சாப்பாட்டை வழங்கிய பொழுது, தீசன் உணவைத் தன் கையினால் தட்டி விட்டான். காமனி அதை எடுத்துத் தூர எறிந்தான்.

பிறகு காமனி படுக்கையிற் சென்று உடலை முடக்கிக் கொண்டு படுத்தான். ராணி அங்கு வந்து காமனியைத் தேற்றினாள். ‘மகனே! கைகால்களை நன்றாக விரித்துக் கொண்டு தாராளமாகப் படுப்பதற்கென்ன?’ என்று அவள் கேட்டாள்.

அதற்கு ‘கங்கைக்கு [மகாவலிக்கு] அப்பால் தமிழர்கள் இருக்கிறார்கள், இந்தப் பக்கம் கோத [பொல்லாத அல்லது சினம் கொண்ட அல்லது கட்டுக்கடங்காத] சமுத்திரம் இருக்கிறது. எப்படி கைகால்களை நான் நீட்டி உறங்கமுடியும்?’ என்றான் துட்டகாமணி

[But when it was said to them : Never will we fight with the Damilas ; with such thoughts eat ye this portion here, Tissa dashed the food away with his hand, but Gamani who had (in like manner) flung away the morsel of rice, went to his bed, and drawing in his hands and feet he lay upon his bed. The queen came, and caressing Gamani spoke thus: ‘ Why dost thou not lie easily upon thy bed with limbs stretched out, my son?’ ‘Over there beyond the Ganga are the Damilas, here on this side is the Gotha-ocean, how can I lie with out- stretched limbs ?’ he answered].

இவைகள் புத்த சமயத்தை முன்னிலைப் படுத்தும் மகாவம்சத்தில் எழுதிய வசனம். நல்ல காலம் புத்தர் இதை படிக்கவில்லை?

மேலும் மகாவலிக்கு வடக்கே தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதை மெய்ப்பிப்பது போல, பேராசிரியர் பத்மநாதன் அவர்கள் 2016ம் ஆண்டு மார்ச் மாதம் வெளிவந்த தமது அண்மைய நூலான “இலங்கைத் தமிழர் வரலாறு – கிழக்கிலங்கையில் நாகரும் தமிழும் – கி.மு 250 – கி.பி 300” என்ற நூலின் தமது பதிப்புரையில் (பக்கம் XIV), “இலங்கையின் மூன்றிலொரு பாகத்திலே தமிழர் சமுதாயம் கி.மு முதலிரு நூற்றாண்டுகளிலும் உருவாகிவிட்டது என்பதையும் தொடர்ச்சியான ஒரு நிலப்பகுதியிலே தமிழ் மொழி பேசுவோர் வேளிர் ஆட்சியின் கீழமைந்த சிற்றரசுகள் பலவற்றை உருவாக்கி விட்டனர் என்றும் சொல்லக் கூடிய காலம் வந்துள்ளது என்கிறார்.

மகாவம்சமே மேலும் இருபத்தைந்தாவது அத்தியாயம் துட்டகாமனியின் வெற்றி [CHAPTER XXV / THE VICTORY OF DUTTHAGAMANI] என்ற பகுதியில் ‘வணக்கத்துக்கு உரியவர்களே ! என்னால் அல்லவோ இலட்சக்கணக்கானவர்கள் மடியும்படி நேரிட்டது’ என காமினி கேட்க, ‘ஒன்றரை மனிதர்கள் மட்டுமே உன்னால் இங்கு கொல்லப்பட்டார்கள், மற்றவர்கள் எல்லாம் நமது மார்க்கத்தை நம்பாதவர்கள். [எனவே] தீய வாழ்வை மேற்கொண்டவர்கள்- [ஆகவே] மிருகங்களை விட உயர்வாக மதிக்கப்படக் கூடாதவர்கள்.

ஆனால் நீயோ புத்தருடைய போதனைகளுக்குப் பலவிதத்திலும் பெருமை தேடப் போகிறவன், எனவே உன் மனதிலிருந்து கவலையை அகற்று அரசனே !’ என்று போதிசத்துவர்கள் [அருகதர்கள்] ஆறுதல் கூறினர் என்கிறது.

[king said again to them : since by me was caused the slaughter of a great host numbering millions ? Only one and a half human beings have been slain here by thee, Unbelievers and men of evil life were the rest, not more to be esteemed than beasts. said Arhat. But as for thee, thou wilt bring glory to the doctrine of the Buddha in manifold ways’]

என்றாலும் அதே நேரத்தில், தமிழ் மன்னன் எல்லாளன் ஆட்சிக்காலம் நீதியானதாகவும், சிறப்பானதாகவும் அமைந்ததாக மகாவம்சம் குறிப்பிடுகின்றது. இவன் இலங்கையை 44 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தான்.

இவனது நீதி தவறாத ஆட்சியைப் புகழ்ந்துரைக்கும் பாளி நூல்கள், இவன் தவறான மார்க்கத்தினை (இந்து மதத்தினை) தழுவியவன் எனவும் கூறப் பின் நிற்கவில்லை. இதுவே, இந்த சமய வெறியே, இவனையும் இவனின் தமிழ் சைவ போர் வீரர்களையும் கொல்ல தூண்டியது எனலாம் ?. அசோகனின் கொலை வெறியை தணித்த புத்தர் எங்கே? மதத்தின் பெயரில் கொலை வெறியை தூண்டிய மகாநாம தேரர் எங்கே ?

துட்ட கைமுனுவின் தாய், களனியை ஆண்ட நாக அரசனின் மகளான விகாரமாதேவி என்பது குறிப்பிடத்தக்கது. இவனின் தந்தை மகாநாகனின் பூட்டனாகும். எனவே உண்மையில் மகாவம்சத்தின் கதைநாயகனான துட்ட கைமுனு (கிமு 101-77) தந்தை வழியிலும் தாய்வழியிலும் நாகர் இனத்தைச் சேர்ந்தவன் ஆவான் என்பதும் குறிப்பிடத் தக்கது.

எனவே சுருக்கமாக சொன்னால், எல்லாளனும் இவனும் திராவிட அல்லது தமிழ் அல்லது இவை கலந்த ஒரு மொழியே பேசியுள்ளார்கள். எல்லாளன் வைதீக சமயத்தவன், துட்ட கைமுனு பௌத்த சமயத்தவன், இது ஒன்றே உண்மையில் அடிப்படை வேறுபாடு.

உதாரணமாக போதிசத்துவர்கள் [‘போதிநிலையில் வாழ்பவர்’ அல்லது ‘போதி நிலைபெற ஆயத்தமானவர்’] கூட, எல்லாளனும் அவனது படையினரும் புத்த மார்க்கத்தை நம்பாதவர்கள், எனவே கொலை செய்யலாம் என்கிறார்களே ஒழிய, அவர்கள் தமிழர்கள் எனவே கொலை செய்யலாம் என்று என்றும் கூறவில்லை. அது மட்டும் அல்ல, இந்த வெற்றிகளுக்குப் பின்னர் கைமுனு ‘இராச்சியங்களைப் பிடிக்க அல்ல, நான் போர் தொடுத்தது, புத்தரின் தர்மத்தை நிலைநாட்டவே’ என்கிறான் என்பது இதை மெய்ப்பிக்கிறது.

கைமுனு எல்லாளன் மீது போர்தொடுக்கப் போவதாகக் கூறிய பொழுது அவனது தந்தையான காகவர்ணதீசன் [அல்லது காவன் தீசன்] “மகா கங்கைக்கு அப்பால் உள்ள பெருநிலப் பரப்பை தமிழர்கள் [சைவர்கள்] ஆளட்டும். மகா கங்கைக்கு இப்பால் உள்ள மாவட்டங்கள் நாங்கள் ஆளுவதற்குப் போதும்” என்கிறான் என்பதும் கவனிக்கத்தக்கது.

சுருக்கமாக, துட்ட கைமுனு காலத்தில் சிங்களவர் என்ற இனம் இருக்கவில்லை. சிங்களம் என்ற மொழியும் இருக்கவில்லை. துட்ட கைமுனு சிங்களவனும் அல்ல என்பது கவனிக்கத் தக்கது.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்]

மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 07

Share.
Leave A Reply