வரலாற்று பிரசித்தி பெற்ற நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ பெருவிழா இன்றையதினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இவ் கொடியேற்ற திருவிழாவில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.
தொடர்ச்சியாக பதினாறு தினங்கள் இடம்பெறவுள்ள நயினாதீவு
ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவிலின் 2023ஆம் ஆண்டுக்கான உயர்திருவிழா ஜுலை 01 ம் திகதியன்று சப்பரத் திருவிழாவும்
ஜுலை 02 ம் திகதியன்று தேர்த்திருவிழாவும் ஜுலை 03 ம் திகதியன்று தீர்த்தோற்சவமும் ஜுலை 04ஆம் திகதியன்று தெப்போற்சவத்துடனும் நிறைவுபெறவுள்ளது.
நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயம் கொடியேற்ற திருவிழா நேரலை –