ஆந்திர போலிசாரின் அட்டூஷியத்தின் உச்சகட்டமாக தற்போது ஒரு சம்பவம் பேசப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரியைச் சேர்ந்த குறவர் இன பெண்ணின் உறுப்பில் அவர்கள் மிளாகாய் பொடி தூவி மிருகமாய் செயல்பட்டிருக்கிறார்கள்.
இது பற்றின விவரம் வருமாறு,
சென்னையிலிருந்து 256 கிமீ தொலைவில் உள்ளது கிருஷ்ணகிரி மாவட்டம்.
இங்கு போச்சம் பள்ளி வட்டம், புலியாம்பட்டி கிராமத்தில் வசிக்கும் குறவர் சமூகத்தை சேர்ந்த 10 பேரை கடந்த ஜூன் 7, 11, 12 ஆகிய தேதிகளில் கைது செய்து இரவில் விசாரணைக்காக ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், பூத்தலப்பட்டு போலீசார் பிடித்து சென்றனர்.
திருட்டு வழக்கில் அவர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறிய சித்தூர் போலீசார் அவர்களை அடித்து துன்புறுத்தி பாலியல் ரீதியில் சித்திரவதை செய்திருப்பதாக கூறப்படுகிறது.
அப்படி கைது செய்யப்பட்டவர்களில் 5 பெண்களும் ஒரு 7 வயது குழந்தையும் அடங்குவார்கள்
இதை அடுத்து சிபிஎம் கட்சியினர் மற்றும் தமிழ் பழங்குடியின குறவர் சங்கத்தினர் ஆந்திரா சென்று 8 பேரை மீட்டு வந்தனர். இன்னும் ஓர் இளம்பெண்ணும் ஓர் ஆணும் மட்டும் விடுவிக்கப்படவில்லை.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்த அவர்கள் சித்தூர் மாவட்டம் பூத்தலப்பட்டு போலீசார் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக கிருஷ்ணகிரி டிஎஸ்பி தமிழரசி விசாரித்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவ மனையில் 30- க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப் பட்டிருக்கிறார்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சராயு இ.ஆ.ப. அவர்கள் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி மற்றும் பெண் டிஎஸ்பி தலைமையில் இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சித்தூர் காவல்துறை எஸ்.பி ரிஷாந்த் ரெட்டி இ.கா.ப. அவர்களுக்கு இதுகுறித்த தகவல் கிடைத்துள்ள நிலையில், அவர் உரிய விசாரணைக்கு உத்தரவிட்ட்டுள்ளார்.
விடுவிக்கப்பட்டவர்கள் கூறுகையில், ஆந்திர போலிசார் கண்களைக் கட்டி ஜீப்பில் அழைத்துச் சென்றனர்.
“எனக்கு நடந்தது வேறு எந்தப் பெண்ணுக்கும் நடந்துவிடக்கூடாது என்பதால், எனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை வெளிப்படையாகச் சொல்கிறேன்,” “கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நான், என் கணவர், மாமியார், என் ஏழு வயது மகன் அனைவரும் இரவு 8 மணி வாக்கில் சாப்பிடுவதற்காக வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்த போது, இரண்டு ஜீப்களில் வந்த 6 போலீசார், கணவரை விசாரிக்க வேண்டும் என்று சொல்லி, அவருடன் எங்களையும் கைகளைக் கட்டி இழுத்துச் சென்றார்கள்,”
என் கணவர் மீது ஏற்கெனவே திருட்டு தொடர்பான சில வழக்குகள் உள்ள காரணத்தால், அவரை ஏதேனும் விசாரணைக்காக அழைக்க போலீசார் வந்திருக்கலாம் என்று நினைத்தோம்.
ஆனால் எங்களையும் இழுத்துச் செல்லவே, ‘எங்களை ஏன் கூட்டிச் செல்கிறீர்கள்?’ என்று கேட்டோம்.
இருப்பினும், “அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் நால்வரையும் ஜீப்பில் ஏற்றிய போலீசார் மூச்சு விடவே சிரமப்படும் அளவுக்கு குழந்தை உட்பட அனைவரது முகத்தையும் கருப்புத் துணியால் மூடி வாகனத்தில் கொண்டு சென்றனர்.
ஒரு பெண் போலீஸ் உட்பட 6 போலீசார் வந்திருந்ததாகவும் சாதியைக் குறிப்பிட்டு ஆபாசமான வார்த்தைகளில் திட்டி இழுத்துச் சென்றனர்.
எங்களை பிடித்துச்சென்ற சம்பவத்தைப் பார்த்த அண்டை வீட்டுப் பெண் ஒருவர், அடுத்த நாள் காலையில் கணினி மையத்திற்குச் சென்று இணையவழி புகாரைப் பதிவு செய்துள்ளார்.
ஜூன் 12ஆம் தேதியன்று ஆன்லைன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறைக்கு அவர் புகார் தெரிவித்தார். பிறகு, அன்றைய தினம் இரவு 8:30 மணியளவில் அவரும் அதேபோல் போலீசாரால் பிடிக்கப்பட்டார்.
“புகாரா கொடுக்குற என்று சாதிப் பெயரைச் சொல்லி ஆபாசமாகத் திட்டியபடியே என்னை, என் கணவரை, என் மருமகளை போலீசார் அடித்தனர் என்றார்.
அதுமட்டுமின்றி, வாகனத்தில் அழைத்துச் செல்லும்போதே தன் மருமகளிடம் அவரது கணவர் எங்கிருக்கிறார் எனக் கேட்டு போலீசார் துன்புறுத்தினர்.
பிறப்புறுப்பில் மிளகாய்ப் பொடி தூவி துன்புறுத்திய ஆந்திர போலீஸ்?
இந்நிலையில், இதற்கும் முன்னதாகவே ஜூன் 7ஆம் தேதியன்று குல்பர்காவில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலீசார் செய்த சித்ரவதையைத் தாங்க முடியாமல் தான் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறுகிறார்.
“என்னை குல்பர்காவுக்கு வந்து 6 போலீசார் ஜூன் 7ஆம் தேதியன்று பிடித்துக் கொண்டு போனார்கள். அய்யப்பன் எங்கிருக்கிறார் என்று கேட்டு என்னை அடித்தார்கள். பிறகு திருடிய நகை எங்கு இருக்கிறது எனக் கேட்டு துன்புறுத்தினார்கள்,”
அதற்கு அடுத்த நாள், “நகையை வாங்கிக் கொடுக்குமாறு சொல்லி கால்களை அகற்றிப் பிடித்து, இரும்புக்கம்பியில் மிளகாய்ப் பொடியைத் தடவி, பிறப்புறுப்பில் குத்தி சித்ரவதை செய்தார்கள்” என்று கதறினார்.
இந்தக் கொடுமைகளைத் தாங்க முடியாமல் கழிவறையில் கிடந்த பிளேடை எடுத்து கையை அறுத்துக்கொள்ளத் தான் முயன்றபோது, “மருத்துவரை வர வைத்து சிகிச்சையளித்து, சிறிது நேரம் இடைவெளிவிட்டு பிறகு மீண்டும் துன்புறுத்தத் தொடங்கியதாக” பாதிக்கப்பட்ட அந்தப் பெண் சொன்னார்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், இந்தச் சம்பவத்திற்குத் தனது கண்டனங்களைத் தெரிவித்தார்.
அதோடு, “தமிழ்நாடு அரசும் காவல்துறையும் ஆந்திர மாநில அரசுடனும் காவல்துறையுடனும் உரிய முறையில் பேச்சுவார்த்தை நடத்தி குற்றமிழைத்த காவலர்கள் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம், பாலியல் வல்லுறவு, சித்தரவதைக்கு உள்ளாக்குதல் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கடுமையான தண்டனையை பெற்றுத் தருவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றும் வலியுறுத்தியுள்ளார்.