தீப்பற்றி எரிந்த வீட்டினுள் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று வவுனியா தேக்கவத்தை பகுதியில் பதிவாகியுள்ளது.

இன்று (21) அதிகாலை குறித்த வீடானது தீப்பற்றி எரிந்துள்ளது.

குறித்த வீடு தீப்பற்றி எரிவதை கண்ட அயலவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் மாநகரசபை தீயணைப்பு பிரிவினர் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதனையடுத்து, வீட்டிற்குள் சென்ற போது குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து, மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன், தடயவியல் பொலிஸாரின் உதவியையும் நாடியுள்ளனர்.

Share.
Leave A Reply