மனைவிக்கு கொடுக்கும் உணவில் கவலை எதிர்ப்பு மருந்தான லோராசெபம் என்ற மருந்தை கலந்து கொடுத்துள்ளார். பத்து ஆண்டுகளாக மனைவிக்கு எந்த சந்தேகமும் வராத அளவுக்கு கொடூரத்தை கணவர் அரங்கேற்றி வந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் டொமினிக். இவரது மனைவி பிராங்கோயிஸ் (வயது 70). இந்த தம்பதியருக்கு திருமணமாகி அரை நூற்றாண்டுகளை கடந்து விட்டது. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் டொமினிக்குக்கு போதைப்பொருள் கும்பலுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து டொமினிக்குக்கு குரூர எண்ணங்கள் உருவாகின.
அதன் வெளிப்பாடாக போதை மருந்து கொடுத்து மனைவி மயங்கி படுக்கையில் சாய்ந்த உடன் வெளியில் உள்ள ஆண்களை வீட்டுக்கு அழைத்து மனைவியுடன் உல்லாசமாக இருக்கச் செய்து அதனை தனது செல்போனில் வீடியோவாக படம் பிடித்து வந்துள்ளார்.
இந்த கொடூரம் நாள் கணக்கிலோ, மாத கணக்கிலோ நடைபெறவில்லை. ஆண்டுக்கணக்கில் நடந்துள்ளது. 2011 முதல் 2020 வரை இந்த கொடூரத்தை டொமினிக் அரங்கேற்றியுள்ளார்.
இந்த நிலையில் பிராங்கா கோஸ்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மனச்சோர்வு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டார். இதையடுத்து கணவரின் கொடூர செயல்களை அறிந்து உணர்ந்து அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் இதுபற்றி அங்குள்ள போலீஸ் நிலையத்தில் கணவர் மீது புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் டொமினிக்கை பிடித்து விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.
இதில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்தது கடந்த 10 ஆண்டுகளில் 92 கற்பழிப்பு சம்பவங்களை உறுதி செய்தனர். இதில் 26 வயது இளைஞர் முதல் 73 வயது முதியவர் வரை மொத்தம் 51 ஆண்கள் அவரை சீரழித்துள்ளது அறிந்து திடுக்கிட்டனர்.
பின்னர் கணவர் உள்ளிட்ட 51 பேரையும் கைது செய்தனர். இவர்களில் தீயணைப்பு வீரர், லாரி ஓட்டுநர், நகராட்சி கவுன்சிலர், வங்கி, ஐ.டி. ஊழியர், சிறைக்காவலர், செவிலியர் மற்றும் பத்திரிகையாளர் ஆகியோரும் அடங்குவர். இதில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே மனைவிக்கு கொடுக்கும் உணவில் கவலை எதிர்ப்பு மருந்தான லோராசெபம் என்ற மருந்தை கலந்து கொடுத்துள்ளார். இதனை சாப்பிட்டால் அடுத்த சில நொடிகளில் சம்பந்தப்பட்டவர் மயக்க நிலைக்கு சென்று விடுவார்.
பின்னர் எழுந்திருக்க சில மணி நேரங்கள் ஆகும். இந்த நேரத்தில் ஆண்களை அழைத்து மனைவியை அவர் பலாத்காரம் செய்ய வைத்துள்ளார். பின்னர் அதனை வீடியோவில் பதிவு செய்து ரசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதற்காக ஆன்லைனில் ஒரு குரூப்பை அவர் உருவாக்கி இருந்துள்ளார். இதில் போதை பொருள் பயன்படுத்தும் பல்வேறு ஆண்கள் இருந்துள்ளனர்.
அக்கம் பக்கத்தில் சந்தேகம் வருவதை தடுக்க இரவு நேரங்களிலேயே இந்த கொடூரத்தை அவர் அரங்கேற்றி வந்துள்ளார். மேலும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய வரும் ஆண்களை சமையலறையில் ஆடைகளை அவிழ்க்க செய்துள்ளார்.
பத்து ஆண்டுகளாக மனைவிக்கு எந்த சந்தேகமும் வராத அளவுக்கு இந்த கொடூரத்தை அரங்கேற்றி வந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்திற்கு சென்றுள்ளது. அப்போது, டொமினிக் தரப்பு வழக்கறிஞர்கள் அவர் எந்த வன்முறை அல்லது அச்சுறுத்தலையும் செய்யவில்லை. ஒவ்வொரு தனி நபருக்கும் அவர்கள் விரும்பும் இடத்துக்கு சென்று உல்லாசமாக இருந்து விட்டு திரும்ப சுதந்திரம் இருப்பதாக வாதிட்டுள்ளனர்.
ஆனால் காவல்துறை தரப்பில் ஒரு சில ஆண்கள் டொமினிக்கின் மனைவிக்கு விருப்பமான பங்கேற்பாளர்கள் அல்ல என கூறினர். இதற்கிடையே பாதிக்கப்பட்ட அந்தப் பெண்மணி கொடூர கணவனின் பிடியில் இருந்து தப்பிக்க விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
பத்தாண்டுகளாக மனைவிக்கு போதை மருந்து கொடுத்து ஆண்களை அனுப்பி பலாத்காரம் செய்ய வைத்த சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.