உல்லாச விடுதியொன்றில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போது ஏற்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பட்டபொல பராதுவ பகுதியில் உள்ள உல்லாச விடுதியொன்றில் சனிக்கிழமை (24) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாள்வெட்டுக்குள்ளான குறித்த நபர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

பட்டபொல கொபெயிதுடுவ பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய பொன்னம்பெரும ஆராச்சிகே எனும் நுவன் சம்பத் என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெள்ளிக்கிழமை (23) இரவு 8.30 மணியளவில் பராதுவ, பட்டபொலவில் அமைந்துள்ள உல்லாச விடுதியில் பலர் மது அருந்திக் கொண்டிருந்த போது அங்கு மது அருந்திய மற்றுமொரு குழுவினருக்கிடையில் தகராறு ஏற்பட்ட நிலையில், அது மோதலாக மறியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மோதலின் போது உயிரிழந்த நபர் மீது இருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிறிது நேரத்தித்தின் பின் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

இந்த தாக்குதல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம், சந்தேகத்தின் பேரில் தாக்குதலுடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply