திருகோணமலை – கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில், இளைஞன் ஒருவன் புகையிரத தண்டவாளத்தில் தலையை வைத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் ஒன்று
நேற்றிரவு (23) இடம்பெற்றுள்ளது.

கந்தளாய், பியந்த மாவத்தை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய கயான் மதுசங்க என்கின்ற இளைஞரே உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,

நேற்று இரவு(23) இரவு நேர தபால் கடுகதி புகையிரதம் திருகோணமலையிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, தண்டவாளத்தில் தனது தலையை வைத்து, உயிரை மாய்த்துக் கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த நபர் திருமணமானவர் என்றும், இந்த கொலைக்கு தானே காரணம் என குறித்த இளைஞன் கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Share.
Leave A Reply