திருமணம் நடைபெற்ற இடம் முழுவதும் மலர்கள் மற்றும் அலங்கார பொருட்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இரட்டை சகோதரிகளில் ஒருவரான லதா இரட்டை சகோதரர்களில் ஒருவரான அமனையும், லட்சுமி ரிஷப்பையும் திருமணம் செய்து கொண்டனர்.

மத்திய பிரதேச மாநிலம் ஷிந்த்வாரா பகுதியை அடுத்த திமிரி கிராமத்தை சேர்ந்த இரட்டை சகோதரிகள் லதா மற்றும் லட்சுமி. இவர்கள் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த இரட்டை சகோதரர்களான அமன் மற்றும் ரிசப்பை திருமணம் செய்து கொண்ட ருசிகர சம்பவம் கோலாகலமாக நடைபெற்றது.

இரட்டையர்களின் இந்த இரட்டை திருமணத்தை பார்க்க அப்பகுதியை சேர்ந்த மக்கள் அதிக அளவில் குவிந்தனர். திருமணம் நடைபெற்ற இடம் முழுவதும் மலர்கள் மற்றும் அலங்கார பொருட்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

ஹோம குண்டத்தை மணமக்கள் 7 முறை வலம் வந்தனர். பின்னர் இரட்டை சகோதரிகளில் ஒருவரான லதா இரட்டை சகோதரர்களில் ஒருவரான அமனையும், லட்சுமி ரிஷப்பையும் திருமணம் செய்து கொண்டனர்.

 

Share.
Leave A Reply