போக்குவரத்து பொலிஸாரின் எச்சரிக்கையை மீறிச்செல்ல முயன்ற 17 வயது இளைஞன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பிரான்ஸ் தலைநகரில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன.

பொலிஸார் கார் ஒன்றின் வாகனச்சாரதியை நோக்கி துப்பாக்கியை இலக்குவைப்பதையும்,அதன் பின்னர் துப்பாக்கி சத்தம் கேட்பதையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

அதன் பின்னர் அந்த கார் ஒரு இடத்தில் மோதி நிற்கின்றது.

இதன்போது 17 வயது இளைஞர் மார்பில் துப்பாக்கி சூட்டுகாயங்களுடன் உயிரிழந்துள்ளார்.

இளைஞன் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர் கொலை குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கி சூட்டு சம்பவத்தை தொடர்ந்து நன்டெரே நகரில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன பாரிசிற்கு மேற்கில் உள்ள அந்த நகரில் குழப்பங்களை ஏற்படுத்தியமைக்காக 31 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த வருடம் பிரான்சில் பொலிஸாரினால் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட இரண்டாவது சம்பவம் இது.

கடந்த வருடம் 13 பேர் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Share.
Leave A Reply