இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை மேலும் தாமதமாகும் என இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, புதுச்சேரியின் காரைக்கால் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள காங்கேசன்துறை துறைமுகங்களுக்கு இடையேயான பயணிகள் கப்பல் சேவை ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் படகு சேவைக்காக தேர்வு செய்யப்பட்ட துறைமுகம் மாற்றப்பட்டதால், இந்த பயணிகள் கப்பல் சேவை தாமதமாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பயணிகள் கப்பல் சேவைக்காக, தற்போது தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் வசதிகளை அதிகரிக்க இந்தியா மேலும் கால அவகாசத்தை கோரியுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை மேற்கோள்காட்டி இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.