கடந்த மாதத்தில் சுமார் ஒரு இலட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந் ஆண்டின் முதல் 6 மாதங்களில் 6 இலட்சத்து 20 ஆயிரம் சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வருடம் 7 இலட்சத்து 20 ஆயிரத்துக்கும் குறைந்த எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகளே நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
2023 இல் இந்தியா மற்றும் ரஷ்யாவிலிருந்து தலா1 இலட்சம் பேர் வருகை தந்துள்ளதுடன், ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் தலா 1 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.
மே மாதத்தில், பருவ காலம் இல்லாத போதிலும் 83,309 பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதுடன், ஜூன் மாதத்தில், இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வந்ததுள்ளதுடன், மொத்தம் 22,388 இந்தியர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
நாடு ஓரளவு நிலைபெற்றுள்ளதால், இந்த ஆண்டின் பிற்பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்று சுற்றுலா அமைச்சு நம்வுவதுடன், நாட்டுக்கு விளையாட்டு ரசிகர்களை ஈர்க்கக்கூடிய பல விளையாட்டு நிகழ்வுகளையும் இலங்கை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.