குருணாகல் – கல்கமுவ, வேவரனவெடிய பகுதியில் காட்டு யானையொன்றும் அதன் குட்டியும் குழிக்குள் வீழ்ந்து கிடப்பதாக பிரதேச வாசிகள் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து இன்று(08) பகல் சம்பவ இடத்திற்கு சென்ற கல்கமுவ வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் காட்டு யானையையும் அதன் குட்டியையும் பாதுகாப்பாக மீட்டெடுக்க கடும் முயற்சி எடுத்துள்ளனர்.

குழியிலிருந்து மீண்டு மேலே வந்த காட்டு யானை அங்கிருந்த உத்தியோகத்தர் ஒருவரை தாக்கியுள்ளதுடன் பலத்த காயமடைந்த அவர் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கல்கமுவ வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழ் பணியாற்றும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்படுகிறது.

காட்டு யானையும் அதன் குட்டியும் காட்டுக்குள் விரட்டப்பட்டன.

Share.
Leave A Reply