மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் வயோதிபப் பெண்ணொருவரின் சடலம் மிதந்த நிலையில் இன்று திங்கட்கிழமை (10) மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

60 வயதுக்கும் 65 வயதுக்கும் இடைப்பட்ட பெண் ஒருவரே உயிரை மாய்த்துக் கொள்ளும் நோக்கில் நீர்த்தேக்கத்தில் குதித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இதுவரை காணப்படவில்லை எனவும், நுவரெலியா மாவட்ட நீதவானின் விசாரணையின் பின்னர் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த தலவாக்கலை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply