சீனாவில் ஆரம்பபாடசாலையொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஆறுபேர் கொல்லப்பட்டுள்ளனர்.

சீனாவின் தென்கிழக்கு குவாங்டாங் மாநிலத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வுஎன அழைக்கப்படும் 25 வயது நபரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரு ஆசிரியர் இரண்டு பெற்றோர்கள் மூன்று மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சம்பவம் இது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் சமீபகாலங்களில் கத்திக்குத்து சம்பவங்கள் அதிகரித்துள்ளன குறிப்பாக ஆரம்பபாடசாலைகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

கடந்த ஆகஸ்டில் ஆரம்பபாடசாலையொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் மூவர் கொல்லப்பட்டனர்.

Share.
Leave A Reply