மனம்பிட்டி பஸ் விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 42 பேர் காயமடைந்து பொலநறுவை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை (9) இரவு 8 மணியளவில் தனியார் பஸ் வண்டி பொலநறுவையிலிருந்து காத்தான்குடி நோக்கிச் சென்று கொண்டிருந்த நிலையில் மனம்பிட்டி கொட்டடி பாலத்தில் விழுந்து விபத்திற்குள்ளானது.
இந்நிலையில், குறித்த பஸ்ஸில் பயணித்த 11 பேர் ஸ்தலத்திலேயே மரணித்துள்ளதுடன் 42 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்துச் சம்பவத்தில் சிலர் காணாமல் போயிருக்கலாமென நம்பப்படும் நிலையில் காணமல் போனோரைத் தேடும் பணிகள் இன்று காலை கடற்படையினாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறித்த பஸ்ஸின் சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.