இலங்கையின் கரையோரப் பகுதிகளுக்கு அருகிலுள்ள சுற்றுலாத் தலங்களை அடையாளம் கண்டு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்யும் வகையில் நாட்டில் இதுவரை 24 இடங்கள் கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தினால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள கடலோர பாதுகாப்பு மற்றும் கடற்கரை வளங்கள் முகாமைத்துவத் திணைக்களத்தினால் இந்த புதிய சுற்றுலா தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவைகள், புத்தளம் – கங்கே வாடியா, புத்தளம் குடா தீவுகள், கற்பிட்டி – குடாவ, புத்தளம் -வைக்கால், நீர்கொழும்பு குடா, கபுங்கொட, பிரிதிபுர, கொக்கல குடா, சீதகல்ல, ரெகவ குடா, லுனம குடா, மலால லேவாய, கிரிந்த, குனுகல கடற்கரை, எலிபெண்ட் ரொக், சலதீவ் தீவு, தம்பலகமுவ விரிகுடா, ஆளுநர் செயலகம், உப்புவெளி, சாம்பல்தீவு கடற்கரை, அரியமல்ல கடற்கரை, நாயாறு கடற்கரை, நந்திக்கடல் கடற்கரை, சாந்தகுளம் கடற்கரை ஆகியவை புதிதாக அடையாளப்படுத்தப்பட்ட சுற்றுலாத் தலங்களாகும்.
இந்நிலையில், கரையோரப் பிரதேசங்களைப் பாதுகாத்து முறையான அபிவிருத்தியை மேற்கொள்வது இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க உதவும் என அமைச்சர் ரணதுங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.