வெளிநாட்டு பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடந்துக்கொண்ட இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டியிலிருந்த தம்புள்ளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் துருக்கி நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் பயணித்துள்ளார்.

வவுனியா இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் ஒருவரும் விடுமுறையில் குறித்த பேருந்தில் பயணித்துள்ளார்.

இதன்போது குறித்த துருக்கிய பெண்ணிடம் தகாத முறையில் நடத்துக்கொண்டதாக அந்த பெண் முறைப்பாடளித்துள்ளார்.

இதற்கு அமைவாகவே இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share.
Leave A Reply