யாழ்ப்பாணம், நல்லூர் திருவிழாவை முன்னிட்டு கல்கிசையில் இருந்து காங்கேசன்துறைக்கு (KKS) விசேட புகையிரத சேவை ஆகஸ்ட் 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த சிறப்பு ரயில் சுமார் மூன்று வாரங்களுக்கு இயக்கப்படும் என்றும், பொதுமக்களின் தேவையைப் பொறுத்து தொடரலாம் என்றும் ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்த்துள்ளார் .

வடக்கு நோக்கிச் செல்லும் ரயிலில் 10 குளிரூட்டப்பட்ட பெட்டிகள் டிவி வசதிகளுடன் இருக்கும். டிக்கெட் விலை ரூ. 4000 இலங்கை ரயில்வே இணையத்தளத்தின் ஊடாக முன்பதிவு செய்யலாம். பயணிகளுக்கு உணவும் வழங்கப்படும் என ரயில்வே வட்டாரம் தெரிவித்துள்ளது.

இதேவேளை ஆறு மாத புனரமைப்பு காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ததைக் குறிக்கும் வகையில், கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை (கேகேஎஸ்) வரையிலான ரயில் பாதை நேற்று திறந்து வைக்கப்பட்டது.

கல்கிசையிலிருந்து KKS வரையிலான யாழ்தேவி, உதயாதேவி மற்றும் கொழும்பு கோட்டையிலிருந்து KKS வரையிலான இரவு அஞ்சல் சேவைகள் நேற்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

மறுசீரமைப்பின் அடுத்த கட்டம் மஹோ முதல் அனுராதபுரத்தை இலக்காகக் கொண்டு அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply