அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பின் கீழ் பால் மாவின் விலையை குறைக்க லங்கா சதொச தீர்மானித்துள்ளது.
இதன்படி, லங்கா சதொச முழுஆடை பால் மா 400 கிராம் பொதி ஒன்றின் விலை 31 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
400 கிராம் பால் மா பொதியின் புதிய விலை 999 ரூபா என லங்கா சதொசவின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இவ் விலை குறைப்பு நாளை(21) முதல் அமுலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.