சிசேரியன் சத்திரகிசிச்சைக்கு பயன்படுத்தப்படும் மார்கெயின் Marcaine Spinal Heavy என்ற மருந்து தட்டுப்பாடு காரணமாக களுத்துறை வைத்தியசாலையின் சிசேரியன் சத்திரசிகிச்சைகள் அனைத்தும்இடைநிறுத்தப்பட்டுள்ளன.
எஞ்சியுள்ள மார்கெய்ன் மருந்தினை தெரிவு செய்யப்பட்ட சிசேரியன் சத்திரகிசிச்சைக்கு பயன்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை என தகவல்வெளியாகியுள்ளது.
தற்போதுள்ள மருந்து இரண்டு நாட்களிற்கே போதுமானது என்பதனால் அதனை அவசரசிகிச்சைகளிற்கு பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மருத்துவமனையில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தவகை மருந்துகள் உள்ள வைத்தியசாலைகளிற்கு நோயாளிகளை மாற்றவும் வைத்தியசாலை நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
இதேவேளை குறிப்பிட்ட வகை மருந்து தனியார்துறையினரிடமும் இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விடயத்தை வைத்தியசாலை நிர்வாகம் சுகாதார அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது.
நோய் எதிர்ப்பு மருந்து ஒவ்வாமை – கேகாலை வைத்தியசாலையில் ஒருவர் உயிரிழப்பு!
நோய் எதிர்ப்பு மருந்து செலுத்தப்பட்டமையால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக கேகாலை போதனா வைத்தியசாலையில் மரணமொன்று சம்பவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கேகாலை பிரதேசத்தை சேர்ந்த 57 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
கல்லீரல் பாதிப்பு காரணமாக கடந்த 10ஆம் திகதி கேகாலை வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
நோய் எதிர்ப்பு மருந்து செலுத்தப்பட்டதால் ஏற்பட்ட ஒவ்வாமையால் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும், அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார் என்றும் வைத்தியசாலையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சர்ச்சைக்குரிய மருந்தான செஃப்டர் எக்ஸோன் மருந்தும் குறித்த நபருக்கு வழங்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் சிரேஷ்ட பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை களுத்துறை – நாகொட வைத்தியசாலையில் மயக்க மருந்து தட்டுப்பாடு காரணமாக சிசேரியன் சத்திர சிகிச்சைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு வைத்தியசாலையின் பணிப்பாளர் தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ள அவர், வைத்தியசாலையில் தற்போது 2 நாட்களுக்கு போதுமான 17 மயக்க மருந்து போத்தல்கள் மட்டுமே உள்ளதாக தெரிவித்துள்ளார்.
எனவே வைத்தியசாலையில் சகல சிசேரியன் சத்திர சிகிச்சைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், கர்ப்பிணித் தாய்மார்கள் வசதியுள்ள ஏனைய வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.