கடந்த இரண்டரை மாதங்களாக மணிப்பூரில் உள்ள மெய்தேய் மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே வன்முறை மோதல்கள் நிலவி வரும் நிலையில், இரண்டு மணிப்பூர் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூரமான வீடியோ புதன்கிழமை வெளியாகியுள்ளது.
பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்ற வீடியோவில் காணப்பட்டவர்களில் நான்கு பேரை மணிப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று மாலை செய்தியாளர்களிடம் பேசும்போது, இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தெரிவித்திருந்தார். அவர் பேசிய அடுத்த சில மணிநேரங்களில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.
இத்தகைய வலி மற்றும் துன்பங்களை அனுபவிக்கும் மக்களுக்குத் தனது வருத்தத்தைத் தெரிவித்த இந்தியாவுக்கான அமெரிக்க தூதர், “ஆனால் இது இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்னை” என்றும் குறிப்பிட்டார்.
வீடியோவில், நிர்வாணமாக்கப்பட்ட பெண்ணை திறந்தவெளி நிலத்திற்கு இழுத்துச் செல்லும் கூட்டத்தில் அந்தப் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாகக் காணப்பட்ட நான்கு ஆண்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வீடியோவை உறுதி செய்த மணிப்பூர் காவல்துறை, தௌபல் மாவட்டத்தில் மே மாதம் 4ஆம் தேதி இந்தப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறியுள்ளனர்.
வீடியோவில், நிர்வாணமாக்கப்பட்ட பெண்ணை திறந்தவெளி நிலத்திற்கு இழுத்துச் செல்லும் கூட்டத்தில் அந்தப் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாகக் காணப்பட்ட இரண்டு ஆண்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீடியோவில் காணப்பட்ட முக்கிய நபர் கைது
இந்தச் சம்பவம் தொடர்பாக தௌபால் மாவட்டத்தில் பெண்களிடம் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை செய்தியாளர்களிடம் பேசும்போது, இதுவரை 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கில் முதல் கைது புதன்கிழமையன்றும் இரண்டாவது கைது வியாழக்கிழமையன்றும் நடந்ததாக அவர் தெரிவித்திருந்தார். புதன்கிழமையன்று கைது செய்யப்பட்ட நபர்தான் இந்த வழக்கில் முக்கிய நபராகக் கருதப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார்.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடையவர்களைக் கைது செய்ய மத்திய பாதுகாப்புப் படையினர் அனைத்து இடங்களிலும் குவிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
முதல்வர் இந்தத் தகவலை வழங்கிய அடுத்த சில மணிநேரங்களில், இதுதொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
வீடியோவில் கூட்டத்தை வழிநடத்துவதாகக் காணப்படும் நபரான ஹூய்ரேம் ஹெரதேஷ் சிங் முதலில் கைதுசெய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் மற்ற மூன்ற பேரின் விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை.
முன்னதாக இன்று காலை இதுகுறித்து மணிப்பூர் போலீசார் கூறுகையில், “இந்த சம்பவம் மே 4ம் தேதி நடந்தது. இந்த வழக்கில், அடையாளம் தெரியாத நபர்கள் மீது கடத்தல், கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் விசாரணை தொடங்கியுள்ளது. குற்றவாளிகளை பிடிக்க போலீசார் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவித்திருந்தனர்.