இன்று அதிகாலை வவுனியா தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இனந்தெரியாத சிலர் வீடொன்றுக்கு தீ வைத்ததில் 21 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் சிறுவர்கள் உட்பட 9 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
119 அவசரச் சட்டத்தின் ஊடாக கிடைத்த செய்தியின் அடிப்படையில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பொலிஸாரும், வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினரும் மற்றும் பிரதேசவாசிகளும் இணைந்து தீயை அணைத்துள்ளனர்.
21 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த ஒன்பது பேர் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
02 வயதுடைய சிறுவன், 07 மற்றும் 13 வயதுடைய இரண்டு சிறுமிகள், 19 முதல் 41 வயதுக்கு இடைப்பட்ட நான்கு பெண்கள், 42 வயதுடைய ஆண் மற்றும் 36 வயதுடைய ஒருவரும் தீயில் சிக்கி காயமடைந்துள்ளனர்.
மகளின் பிறந்தநாளுக்கு வீட்டு உரிமையாளர் விருந்து நடத்திக் கொண்டிருந்த போது முகமூடி அணிந்த கும்பல் ஒன்று வந்து தீ வைத்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.