அநுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய பகுதியில் நபரொருவரின் கழுத்தை அறுத்து கொலை செய்தார் என்ற சந்தேகத்தில் ஒருவரை நேற்று திங்கட்கிழமை (24) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 5 ஆம் திகதி கஹட்டகஸ்திகிலிய பகுதியில் விவசாய கிணறு ஒன்றிலிருந்து நபரொருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கொலை செய்த நபரான தந்தைக்கும் கொலை செய்யப்பட்ட அவரது மகனுக்குமிடையில் நீண்ட நாட்களாக முரண்பாடு நிலவிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அவரை கொலை செய்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply