லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெயாவெல் தோட்டத்தில் மூன்று வயது ஆண் குழந்தை மீது கொதிநீரை ஊற்றி கொடூர செயலில் ஈடுப்பட்டவரை லிந்துலை பொலிஸார் (25) மாலை கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தை என லிந்துலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தை தனது பாட்டியின் ஆதரவுடன் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தையின் தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இந்த கொடூர சம்பவம் (24) இரவு லிந்துலை பொயாவெல் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் கொழும்பில் பணிப் பெண்ணாக தொழிலாற்றி வருகிறார்.
இப் பெண்ணுக்கு ஆறு பிள்ளைகள் இருக்கின்றனர்.இவர்கள் தனது பாட்டி,மற்றும் தந்தையின் அரவணைப்பில் வசித்து வருகின்றனர்.
சம்பவ தினமான (24)இரவு குழந்தையின் தந்தை மது அருந்திய நிலையில் வீட்டுக்கு வருகை தந்திருந்த நிலையில் குழந்தையின் பாட்டியுடன் குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதன் போது தனது கடைசி குழந்தையான மூன்று வயதான ஆண் குழந்தை மீது கொதிநீரை ஊற்றியுள்ளார்.
இதனால் துடி துடித்த குழந்தையின் முதுகு பகுதி உள்ளிட்ட பல இடங்களில் நீர் பட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளது.
பின் லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதுடன்,தனது பாட்டியின் பாதுகாப்பில் குழந்தை சிகிச்சைபெற்று வருகிறது.
இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸார் தகவல் அறிந்து விசாரணைகளை முன்னெடுதுள்ளனர்.
இதையடுத்து குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்திய தந்தையை (25) மாலை கைது செய்துள்ள பொலிசார் (26) நாளைய தினம் நுவரெலியா நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய நடவடிக்கை எடுத்துள்ளனர்.