இலங்கையில் படுகொலைகள் ஆரம்பமானவேளை நான் இலங்கையின் மலைநாட்டில் மலைகளில் ஏறிக்கொண்டிருந்தேன்.
கொழும்பிலிருந்து குழப்பமான செய்திகள் கிடைத்ததும் எங்களின் நண்பர்கள் எங்களை கண்டிக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டார்கள் – ஏன் என்றால் கண்டி கடந்தகாலங்களில் கலவரங்களில் இருந்து தப்பியிருந்தது.
ஆனால் ஜூலை 26 ம் திகதி கொழும்பிற்கு வந்தவேளை அதிர்ச்சி காத்திருந்தது – நகரம் தீயின்பிடியில் சிக்குண்டிருந்தது.கலவர கும்பல்கள் கையில் தடி போன்றவற்றுடன் நடமாடிக்கொண்டிருந்தன, நகரின் மையத்திலிருந்த ஹோட்டல் ஒன்றிலிருந்து வானைநோக்கி தீப்பிளம்புகள் நீண்டுகொண்டிருந்தன.
ஒரு முழுவீதியே எரிந்துகொண்டிருந்தது.
நாங்கள் கண்டிக்கு வந்துசேர்ந்து சில மணிநேரங்களில் நாடளாவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
இலங்கையில் சிங்கள பெரும்பான்மையினத்தவர்களும் தமிழ் சிறுபான்மையினத்தவர்களும் வாழ்கின்றனர் சிங்கள பெரும்பான்மையினத்தவர்கள் பௌத்தர்கள்- தமிழர்கள் அதிகளவிற்கு இந்துக்கள் என்பதை தவிர நாங்கள் வேறு எதனையும் அறிந்திருக்கவில்லை.
இதற்கு முன்னர் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதையும் நாங்கள் அறிந்திருக்கவில்லை.
எரிக்கப்பட்ட அந்த வீதியில் தமிழர்கள் வாழ்ந்தனர் என ஹோட்டல் பணியாளர்கள் எங்களிற்கு தெரிவித்தார்கள்.
இளைஞர்கள் பேருந்தினை நிறுத்தி அதிலிருந்தவர்களை கதைக்குமாறு ஏன் கேட்டார்கள் என்பதை நாங்கள் தற்போது உணர்ந்துகொண்டோம், தமிழர்கள் இவ்வாறே அடையாளம் காணப்பட்டு பேருந்துகளில் இருந்து கொண்டு செல்லப்பட்டார்கள்.
ஊரடங்கு சட்டம் பல மாதங்கள் நீடித்தது- ஜூலை 29ம் திகதி மாலை அது நீக்கப்பட்டவேளை நாங்கள் இலங்கையின் கிழக்கில் உள்ள தமிழர் பகுதிக்கு தப்பிச்சென்றோம் அது அமைதியாக காணப்பட்டது- ஏனையவர்களிற்கு ஜூலை 29 என்பது ஒரு நரகம்.
இதற்கு முதல் நாள் ஜனாதிபதி ஜூனியஸ் ஜெயவர்த்தன தனது அமைச்சரவையின் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். தனிநாட்டிற்கான கோரிக்கையே இந்த அமைதியின்மைக்கு காரணம் என அவர் குற்றம்சாட்டினார்.
ஜூலை 29 வரலாற்றில் கறுப்பு வெள்ளிக்கிழமை என பதியப்பட்டது.
ஜனாதிபதியின் குற்றச்சாட்டுகளால் விளைவுகள் ஏற்பட்டன, கறுப்பு வெள்ளிக்கிழமை என அழைக்கப்படும் 29ம் திகதி முன்னரை விட அதிக தமிழர்கள் கொலை செய்யப்பட்டனர்.
தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இந்த படுகொலைகளை இவ்வாறு நினைவுகூருகின்றார்.
ஜூலை 25ம் திகதி சிங்கள காடையர்கள் நாங்கள் வசித்த பகுதிக்கு வந்து அருகிலுள்ள வீடுகளை தீக்கிரையாக்கினர். எங்கள் வீதியில் தமிழர்கள் இல்லை என தெரிவித்து பௌத்தமதகுரு ஒருவர் அவர்கள் எங்கள் வீதிக்கு வருவதை தடுத்தார்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சுமந்திரன் தமிழர்கள் அதிகமாக வாழும் வெள்ளவத்தையின் அருகில் உள்ள சிங்களவர்கள் அதிகமாக வாழும் தெகிவளையில் வசித்தார்.
1983 ஜூலை மாதம் 19 வயதான அவர் பல்கலைகழக தேர்வுகளிற்கு தயாராகிக்கொண்டிருந்தார்.
எனது தந்தை அவ்வேளை ஒரு காப்புறுதி நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார். அவரது சிங்கள மேலதிகாரியே அவரை பாதுகாப்பாக வீட்டிற்கு கொண்டுவந்தார் என நினைவுகூர்ந்தார் சுமந்திரன்.
29ம் திகதியே கொலைகள் அதிகரித்தன நிலைமை மோசமடைந்தது எங்களை சுமார் 50 அகதிகளுடன் சிறியசரக்குகப்பலில் ஏற்றி யாழ்ப்பாணத்திற்கு அனுப்பினார்கள். மூன்றுநாட்கள் உணவும் தண்ணீரும் இன்றி நாங்கள் பயணித்தோம். ஒருமாதம் எனது பாட்டனாருடன் தங்கியிருந்தேன். பிற்போடப்பட்ட இறுதிப்பரீட்சைக்காக நான் மீண்டும் கொழும்பு சென்றேன். ஆனால் கறுப்பு ஜூலை காரணமாக இந்தியாவில் கல்வியை தொடர தீர்மானித்தேன்.
துன்புறுத்தப்பட்ட தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்த சிங்களவர்கள்
தமிழ்நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அவ்வேளை பாதிக்கப்பட்டார்.
அவ்வேளை அவருக்கு 9 வயது கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்விகற்றுக்கொண்டிருந்தார். கொழும்பின் உயர்குழாமின் பாடசாலை –பாடசாலைக்கு காரிலேயே அவர் செல்வது வழமை. மிகவும் மதிக்கப்பட்ட சட்டத்தரணிகள் குடும்பத்தில் பிறந்த அவர் செல்வச்செழிப்பு மிக்க ஒரு பகுதியில் வசித்தார்.
25ம் திகதி பெற்றோர் அவரை பாடசாலையிலிருந்து சிங்கள நண்பரின் வீட்டிற்கு கொண்டு செல்லுமாறு கார்சாரதியை கேட்டுக்கொண்டனர்.
அடுத்த சில நாட்கள் அவரின் குடும்பத்தவர்கள் ஒவ்வொரு இடமாக மாறிக்கொண்டிருந்தனர்-சிங்கள நண்பர்களுடன் தங்கியிருந்தனர் – அனைவரும் பெரிதும் மதிக்கப்பட்ட சட்டத்தரணிகள்.
அந்தவீட்டில் வீட்டுப்பணிப்பெண் ஒருவர் மாத்திரம் இருந்தார் காடையர் கும்பல் அந்த வீட்டை எரிக்க முயன்றவேளை என்னை எரித்துவிட்டு வீட்டை எரியுங்கள் என அவர் அந்த கும்பலுடன் வாதிட்டு அந்த வீட்டை பாதுகாத்தார். என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவித்தார்.
அவரை அந்த வீட்டில்வைத்து பாதுகாத்த சிங்கள சட்டத்தரணிகள் தமிழர்களை பாதுகாத்தமைக்காக தங்களை சக சிங்களவர்கள் ஏசினார்கள் என பலவருடங்களிற்கு பின்னர் தெரிவித்தனர் எனவும் கஜேந்திரகுமார் குறிப்பிட்டார்.
நான் வளர்ந்த சிங்களவர்கள் மிகவும் பெருந்தன்மை மிக்கவர்கள் அன்று காணப்பட்ட நாட்டை இன்று காணப்பட்ட நாட்டுடன் ஒப்பிடமுடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
கறுப்புஜூலை இனக்கலவரம் என்பது மிகநீண்டகாலமாக தமிழீழ விடுதலைப்புலிகளின் தாக்குதலிற்கான தன்னெழுச்சியாக சித்தரிக்கப்பட்டுவந்தது.
எனினும் இந்த கலவரம் மிகவும் நீண்டகாலமாக திட்டமிடப்பட்ட ஒன்று -தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் 1972இல் தோற்றம்பெற்றது இலங்கையின் வடக்குகிழக்கில் தனிநாடு என்பதே அவர்களின் இலக்கு- 1983 ஜூலை மாதம் 32 உறுப்பினர்கள் மாத்திரமே அந்த அமைப்பிலிருந்தனர், அதுவரையில் அவர்கள் மேற்கொண்ட மிகப்பெரிய தாக்குதல் அது 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
விடுதலைப்புலிகளின் தலைவரின் நெருங்கிய சகாவான சார்ல்ஸ்அன்டனியின் மறைவிடம் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலிற்கு பழிவாங்குவதற்காகவே இந்த தாக்குதல் இடம்பெற்றது.
அந்த தாக்குதலின் பின்னர் கொல்லப்பட்ட 13 படையினரின் உடல்களை குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதற்கு பதில் ஜனாதிபதி ஜெயவர்த்தன கொழும்பிற்கு எடுத்துச்செல்ல தீர்மானித்தார்.
24ம் திகதி இராணுவத்தினரின் உடல்கள் கனத்தை மயானத்திற்கு வந்தவேளை சீற்றமடைந்த சிங்களவர்கள் அங்கு திரண்டனர். இன்றும் பலராலும் மதிக்கப்படும் எல்லே குணவசன் தேரரே தனது உரைகள் மூலம் மக்களை தூண்டினார்.
அன்றுமாலை கும்பலொன்று தமிழர் பகுதிகளை நோக்கி நகர்ந்து முதலாவது தமிழர் வீடுகளிற்கு தீமூட்டியது.
பௌத்தமதகுருமாரும் அமைச்சர்களும் நிலைமையை மேலும் கொந்தளிப்பானதாக மாற்றினர்,
அவ்வேளை தொழில்துறை அமைச்சராக பணியாற்றிய சிறில் மத்தியுஸ் ஆகியோர் இனக்கலவரத்தை திட்டமிட்டதில் முக்கியமானவர்கள்.
சிலமாதங்களிற்கு முன்னர் அமைச்சர் சிறில்மத்தியு பாணந்துறையில் உள்ள பௌத்த ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்டவேளை பௌத்தமதகுரு களுபஹன பியரட்ண தேரரும் அங்கு காணப்பட்டார், அவர் அங்கு அந்த ஆலயத்தின் பிரதம மதகுருவிடம் வடக்குகிழக்கில் உள்ள பௌத்தஆலயங்களின் வரைபடத்தை காண்பித்தார்,
17 வயதான அவர் கறுப்பு ஜூலையில் கொழும்பில் உள்ள பகுதிகளிற்கு சென்றவேளை அதிர்ச்சியடைந்தார், தமிழர் வாழும் வெள்ளவத்தை பகுதியில் பல முற்றாக எரிந்த வீடுகளை பார்த்தேன்,டயர்கள் எரிந்துகொண்டிருந்தன,கருகிய உடல்கள் வீதியில் காணப்பட்டன, என அவர் குறிப்பிட்டார்.
அதிஸ்டவசமாக நான் தமிழர்களை பாதுகாத்துக்கொண்டிருந்த சிங்களகுடும்பங்களும் பௌத்த ஆலயங்களையும் பார்த்தேன் எனவும் அவர் தெரிவித்தார்.
அன்று முதல் களுபானதேரர் நாட்டில் சமாதானத்திற்காக பிரச்சாரத்தை மேற்கொண்டுவருகின்றார்,அவர் மனித உரிமை ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றியிருந்தார்.