களுத்துறை வடக்கு கடற்கரையில் நிர்வாணமாக காணப்பட்ட பெண் ஒருவரின் சடலத்தை இன்று (28) காலை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, நேற்று வியாழக்கிழமை (27) இரவு களுத்துறை வடக்கு நாகசந்திக்கு அருகில் உள்ள கடற்கரைப் பகுதியில் இருந்து குழந்தையின் சடலமொன்று மீட்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஹல்கந்தவில பிரதேசத்தில் தாயும் மகளும் காணாமல்போனதாக ஏற்கனவே தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில், நேற்றிரவு மீட்கப்பட்ட குழந்தை மற்றும் இன்று காலை மீட்கப்பட்ட பெண்ணின் சடலங்கள் ஹல்கந்தவில பிரதேசத்தில் காணாமல்போன தாய் மற்றும் குழந்தையின் சடலங்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று காலை சடலமாக மீட்கப்பட்ட பெண், நேற்றிரவு நாகசந்திப் பகுதியில் மீட்கப்பட்ட குழந்தையின் தாயார் என பொலிஸார் தெரிவித்ததை தொடர்ந்து, களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share.
Leave A Reply