மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை பெரிய சோளங்கந்த தோட்டத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை (29) மீட்கப்பட்டுள்ளது.

பெரிய சோளங்கந்த தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான 49 வயதுடைய தனலெட்சுமி என்பவரே உயிரிழந்துள்ளார்.

மஸ்கெலிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து குறித்த இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை பார்வையிட்டதன் பின்னர், ஹட்டன் மாவட்ட நீதிபதிக்கு தகவல் வழங்கப்பட்டது.

அதனையடுத்து, சம்பவ இடத்துக்கு ஹட்டன் மாவட்ட பதில் நீதிபதி வருகைதந்து சடலத்தை பார்வையிட்டார்.

அதன் பின்னர், பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.

தற்போது சடலம் கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply