நீர் கட்டண அதிகரிப்பு காரணமாக சிற்றுண்டி வகைகளின் விலைகளும் அதிகரிக்கப்படுமென அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

உணவகங்கள் அதிகளவு நீரை பயன்படுத்தப்படுவதால், நீர் கட்டண திருத்தத்தின் ஊடாக அதிகரிக்கப்படும் தொகையை வாடிக்கையாளர்களிடம் இருந்து அறவிட வேண்டியுள்ளதாக சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கையொப்பத்துடன் ஒகஸ்ட் 01 ஆம் திகதி முதல் நீர் கட்டணத்தை உயர்த்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply