எப்பாவல பொலிஸ் பிரிவுக்கு உ ட்பட்ட சந்தரஸ்கம பிரதேசத்தில் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் வீடொன்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக எப்பாவல பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் 24 வயதான இளைஞரே தற்கொலை செய்தவராவார்.
தனது சகோதரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த இளைஞரின் 3 சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரியும் இதற்கு முன்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு காரணங்களால் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
7 பேர் கொண்ட இந்தக் குடும்பத்தில் இதுவரை ஐவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.