82 வயதான தனது பாட்டியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் எனக் கூறப்படும் 57 வயது மருமகனை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை பதில் நீதிவான் காந்திலதா உத்தரவிட்டுள்ளார்.

கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குருந்துவத்த வாகெதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

விசாரணைகளை மேற்கொண்ட குருந்துவத்தை பொலிஸார், பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணின் மகள் சந்தேக நபரின் இளைய சகோதரனை திருமணம் செய்துள்ளதாக நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வயோதிபப் பெண் திருமணமான தனது மகளுடன் வசிப்பதாகவும், யாரும் இல்லாத நேரத்தில் சந்தேக நபர் வீட்டுக்குச் சென்று துஷ்பிரயோகம் செய்ததாகவும், இதுபற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் கூறியதாகவும் பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply