2006 ஜனவரி 2ம் திகதி எமது பாடசாலையின் 5 நண்பர்கள் கொல்லப்பட்ட பின்னர் 7 மாதங்களின் பின்னர் இந்த சம்பவம் இடம் பெற்றது.

பிரான்சை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஊழியர்கள் 17 பேர் 2006 ஆகஸ்ட் 3 அல்லது 4ம் திகதி கொல்லப்பட்டனர்

15 பேர் தலையில் சுடப்பட்டும் இருவர் வாகனத்திலும் இறந்து காணப்பட்டனர்.

விடுதலைப் புலிகள் மூதூர் வரை முன்னேற முயன்று அங்கிருந்து பின் வாங்கிய பின் இந்த கொலைகள் இடம்பெற்றது.

அந்த நேரம் யுத்த கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த ஐரோப்பிய அமைப்பு இது அரச படையினரால் நடத்தப்பட்ட கொலையென திட்டவட்டமாக கூறியிருந்தது. மனித உரிமைகளுக்கான பல்கலைகழக ஆசிரியர்கள் அமைப்பும்இந்த கொலைகளுக்கு காரணம் அரச தரப்பு எனக் கூறியிருந்தது.

இவைகள் தாண்டி திருகோணமலை மக்களுக்கு தெளிவாக இந்த கொலைகளைச் செய்தவர்கள் யார் என்பது தெரியும்.

இறந்தவர்களது உடல்கள் ஓரிரு நாட்கள் கழித்தே அங்கிருந்து எடுக்கப்பட்டது தலையில் சுடப்பட்டு முகம் மண்ணில் புதைந்தபடி இருந்தமையால் அவர்களது இறுதிக்கிரியைகளில் முகங்களைக் கூட எங்களால் பார்க்க முடியவில்லை.

இறந்தவர்களில் பலர் எங்களுக்கு தெரிந்தவர்கள் நண்பர்கள் நண்பர்களின் சகோதரகள்.

ஜனவரி மாதம் 5 மாணவர் படுகொலையில் இறந்த நண்பர் ஹேமச்சந்திராவின் சகோதரர் இந்த சம்பவத்தில் உயிர் இழந்தார் அந்த குடுபத்துக்கு 7 மாதத்தில் இரண்டாவது பேரிழப்பாக இது இருந்தது.

யாரிடம் எப்படி நியாயங்களை கேட்பதென்று தெரியாமலும் அச்சுறுத்தல்கள் தாங்க முடியாமலும் பெரும் துயரில் பல குடும்பங்கள் புலம்பெயர்ந்து விட்டார்கள்.

இன்று வரை நியாயம் கிடைக்காத படுகொலை.

ராஜ்குமார் ரஜீவ்காந்

Share.
Leave A Reply