திடீர் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட சிறுவன் ஒருவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் நீர்கொழும்பு பாடசாலையில் 8ஆம் தரத்தில் கல்வி கற்கும் 13 வயது மாணவன் ஆவார்.

இரு தினங்களுக்கு முன்னர் குறித்த சிறுவனுக்கு தலைவலியுடன் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் காய்ச்சல் கூடுவதும் குறைவதுமாக காணப்பட்டதாகவும் உயிரிழந்த சிறுவனின் தந்தை தெரிவித்தார்.

இந்நிலையில், தனது மகன் நேற்று சனிக்கிழமை (5) இரவு தூக்கத்துக்கு சென்றுள்ளதாகவும், பின்னர் மகன் அசைவற்ற நிலையில் காணப்பட்டதால் அன்றிரவு 10.30 மணியளவில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் சிறுவனின் தந்தை தெரிவித்தார்.

இந்நிலையில், மகன் மூச்செடுப்பதில் சிரமத்தை எதிர்கொண்டார் என்றும் வைத்தியர்கள் மகனை காப்பாற்ற கடுமையாக போராடினர். ஆனாலும், மகன் இன்று 6ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.20 மணியளவில் உயிரிழந்துவிட்டார் என்றும் அவர் தெரிவித்தார்.

உயிரிழந்த சிறுவனின் உடல் நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply