கிணற்றில் தவறி விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேசத்தில் நேற்று (06) மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த சிறுவன் தாயாருடன் குளித்துக் கொண்டிருந்தபோதே கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
அருணாசலம் சிவரூபன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்ததா சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.