அடுத்த இரண்டு வாரங்களில் பல பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பிளாஸ்டிக் மாலைகள், ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் கரண்டி, முட்கரண்டி, தயிர் கரண்டி, பிளாஸ்டிக் ஸ்ட்ரோ , பிளாஸ்டிக் தரை விரிப்புகள் போன்ற பல பொருட்களுக்கு அடுத்த இரண்டு வாரங்களில் தடை விதிக்கப்படும் என அமைச்சர் நசீர் அஹமட் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே சுற்றாடல் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.