நானுஓயா பிரதான நகரில் திங்கட்கிழமை (07) காலை இடம்பெற்ற வாக்குவாதத்தை அடுத்து இடம்பெற்ற கத்தி குத்து சம்பவத்தில் வர்த்தகர் காயமடைந்தார்.

இதில் படுகாயமடைந்த வர்த்தகர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வர்த்தக நிலைய வாடகை மற்றும் பணம் கொடுக்கல் வாங்கல் காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதலால் இந்த மோதல் இடம்பெற்றதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்படுகின்றது

கத்தியால் குத்தியவர்கள் சகோதரர்கள் எனவும் , இவர்கள் இருவரும் தானாகவே நானுஓயா நிலையத்தில் சரணடைந்ததாக சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply