மீரிகம – வில்வத்த பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தையடுத்து வடக்கு மற்றும் மலையக ரயில் மார்க்கங்களில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாற்று வீதிகளை பன்படுத்துமாறும் ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

மீரிகம பகுதியில் ரயிலுடன் கொள்கலன் லொறியொன்று மோதியதால் குறித்த விதப்து இடம்பெற்றுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பொல்கஹவெலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் குறித்த கொள்கலன் மோதியுள்ளது.

ரயிலில் மோதிய கொள்கலன் பெட்டி சுமார் 100 மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு நிறுத்தப்பட்டதால் புகையிரத சிக்னல்கள், மின்கம்பங்கள், புகையிரத கதவுகள் என்பன பலத்த சேதம் அடைந்துள்ளன.

இந்த விபத்தால், ரயிலின் சக்கரங்கள் மற்றும் என்ஜின் பலத்த சேதமடைந்துள்ளன.

இதனால் பல ரயில் சேவைகள் தாமதமாக புறப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது

இதேவேளை, குறித்த விபத்து காரணமாக இந்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பயணிகள் மற்றும் சாரதிகள் பின்வரும் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Share.
Leave A Reply