மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பார்வீதியிலுள்ள மதகு ஒன்றின் கீழ் இருந்து அடையாளம் காணப்படாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று வியாழக்கிழமை (10) காலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பார்வீதி உப்போடை சந்தியை அண்மித்த பகுதியிலுள்ள மதகின் கீழ் சடலம் ஒன்று இருப்பதை இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு அவதானித்த பொதுமக்கள் பொலிஸாருக்கு தெரிவித்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற குறித்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நீதிமன்ற உத்தரவை பெறுவதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்துவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply