யாழ்ப்பாணத்தில் ஆசிரியரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவனின் முக நரம்புகள் பாதிக்கப்பட்ட நிலையில் மாணவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவனுக்கு ஆசிரியர் முகத்தில் கைகளால் அறைந்துள்ளார்.

அதனால் முகத்தில் கடும் வலி ஏற்பட்ட நிலையில் மாணவனை பெற்றோர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த போது, மாணவனின் முகத்தில் உள்ள நரம்புகள் பாதிக்கப்பட்டமை வைத்தியர்களால் கண்டறியப்பட்டு மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு வைத்தியசாலை ஊடாக அறிவிக்கப்பட்ட நிலையில் , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply