யாழ்பாணம் வண்ணார்பண்ணை பகுதியில் உள்ள வெற்றுக்காணி ஒன்றில் இருந்து சிதைவடைந்த நிலையில் சிசு ஒன்றின் உடற்பாகம் இன்று மாலை மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதி அயலவர்களினால் உடற்பாகம் அடையாளம் காணப்பட்ட நிலையில் யாழ்ப்பாண பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் யாழ் போதான வைத்தியசாலை சட்ட வைத்தியஅதிகாரியும் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டார்.

முதல் கட்ட விசாரணையில் சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு அண்மையில் உள்ள கோம்பயன்மணல் இந்து மயானபகுதியில் புதைக்கப்பட்ட சடலம் விலங்குகளால் எடுத்துவரப்பட்டிருக்குமா? என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply