இரண்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் வகுப்பில் கொடுக்கப்பட்ட வீட்டு வேலையைச் செய்யாத காரணத்தினால் ஆசிரியைஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக நாத்தாண்டிய, கொஸ்வத்தை பொலிஸ் சிறுவர்
தாக்குதலுக்கு உள்ளான மாணவன் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தாக்கப்பட்ட மாணவனின் முதுகில் பல காயங்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். தென்னம் கம்பினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
தாக்குதலுக்கு உள்ளான மாணவனின் தாயார் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், மாணவியிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த ஆசிரியையை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.