துருக்கியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் இலங்கைப் பணியாளர்கள் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துருக்கியில், இஸ்தான்புல் விமான நிலையத்தில் பணிபுரியும் இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்துக்குள்ளாகி 27 பேர் காயமடைந்துள்ளனர்.
இத்தச் சம்பவம் இடம்பெற்றபோது குறித்த பஸ்ஸில் 39 இலங்கையர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்களில் 27 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.