முல்லைத்தீவு முள்ளியவளை பொது சந்தையில் நேற்று இரவு அடையாளம் தெரியாத சிலர் புகுந்து தாக்குதல் மேற்கொண்டதில் வியாபாரிகளின் மரக்கறிகள் உள்ளிட்ட பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு காவலாளி சந்தையின் முன் கதவினை பூட்டிய நிலையில், வாகனத்தில் வந்த குழுவொன்று சந்தையின் கதவினை உடைத்து உள்ளே புகுந்து சந்தைக்குள் இருந்து மது அருந்தபோவதாக காவலாளியுடன் முரண்பட்ட நிலையில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை சந்தையினை பூட்டி பொலிஸார் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்திய நிலையில் சம்பவ இடத்திற்கு முள்ளியவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் சென்று பார்வையிட்டனர்.

இதேவேளை முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேதமடைந்த கடைகள் மரக்கறிகளை பார்வையிட்டு அறிக்கையிட்ட பொலிஸார் சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

Share.
Leave A Reply