மேலும், வரலாற்றுச் சிறப்புமிக்க லஹைனா கடற்கரையில் 80 சதவீத பகுதிகள் தீக்கு இரையாகிவிட்டன என்றும் கூறினார். டோரா புயலின் காரணமாக வீசிய சூறாவளிக் காற்று தீ மேலும் பரவக் காரணமாக இருந்தது.
தீ வேகமாகப் பரவியதால் லஹைனா கடற்கரையில் குழுமியிருந்த சுற்றுலாப் பயணிகள் கடலுக்குள் குதித்து மிகுந்த சிரமங்களுக்கு இடையே பல மணிநேரம் நடந்து தப்பிச் சென்றனர்.
ஹவாயில் காட்டுதீயினால் முற்றாக அழிவடைந்துபோன லகையினாவின் மக்கள் தங்கள் பகுதிகளிற்கு திரும்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அவர்கள் தங்கள் பகுதிக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் இழப்புகள் குறித்த விபரங்கள் வெளியாகின்றன.
அவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒருபோதும் காணாத அழிவுகளை காணவேண்டியிருக்கும் என்ற எச்சரிக்கைக்கு மத்தியில் அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளிற்கு திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.
கடந்தவார தீ காரணமாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த நகரம் முற்றாக அழிவடைந்துள்ளது.
தங்கள் ஆடைகளுடன் அந்த பகுதியிலிருந்து வெளியேறிய மக்கள் தாங்கள் தங்கள் அடையாளத்தை நிரூபிக்கவேண்டிய நிலையேற்படலாம் என கவலை வெளியிட்டுள்ளனர்.
ஹவாயின் சில பகுதிகளில் ஊரடங்கு நடைமுறையில் உள்ள அதேவேளை மோசமாக பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் இடம்பெறுவதால் அந்த பகுதிகளிற்கு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது.
லகைனா அமைந்துள்ள பகுதியில் தொடர்ந்தும் மின்சாரமும் நீரும் இல்லாத நிலை காணப்படுகின்றது.
கரையோர காவல்படையினர் நகரின் துறைமுக பகுதியில் நீரிலிருந்து 17 பேரை உயிருடன் மீட்டுள்ளனர்.
மிகவும் பயங்கரமான சம்பவங்கள் குறித்து கேள்விப்படுவதாக சுற்றுலாப்பயண முகவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீரிற்குள் குதித்தனர் – தீ மிகவேகமாக பரவியதால் மக்கள் நீரில் குதித்தனர் அது மாத்திரமே அவர்களுக்கான ஒரேவழியாக காணப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மிகப்பெரிய ஆலமரம் கரிக்கட்டையாக நிற்கும் அவலம்
லஹைனாவின் புகழ்பெற்ற ஆலமரத்தையும் இந்த தீ விட்டு வைக்கவில்லை. இந்த ஆலமரம் அமெரிக்காவிலேயே மிகப்பெரிய மரமாகக் கருதப்படுகிறது.
தீயில் கருகிய நிலையில் அப்படியே நிற்கும் அந்த ஆலமரம் இனிமேல் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் நிலைக்குத் திரும்பாது என்ற அச்சம் அனைவரிடமும் காணப்படுகிறது.