சிலாபம் மேற்கு இரணைவில சமிந்துகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து 09 வயதுடைய சிறுமியின் சடலம் நேற்று மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வீட்டினுள் கயிற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக மரணம் எனக் கருதி சிலாபம் பொலிஸ் தலைமையக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சிறுமியின் தாய் கடந்த இரண்டு வருடங்களாக வெளிநாட்டில் தொழில் செய்து வந்தவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சம்பவத்தின் போது சிறுமியின் தந்தை குடியிருப்பில் உள்ள தோட்டத்திற்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
குழந்தையின் சடலம் மாரவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.