கனடா நாட்டு சிறார்கள் இருவரை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படும் சுற்றுலா வழிக்காட்டி ஒருவரை தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
16 வயதான சிறுமியும் சிறுவனும் அவர்களது, தந்தையுடன் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.
சுற்றுலாவின் போது, கொஸ்கொடையில் இருந்து காலி கோட்டையை பார்வையிடுவதற்காக வேனில் பயணித்த இரண்டு சிறுவர்களையும் சுற்றுலா வழிகாட்டி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் இருந்து, தப்பிச் சென்றுள்ள சந்தேகநபரை தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.