வீதியை கடக்க முற்பட்டபோது மோட்டார் சைக்கிள் மோதி சில தினங்களுக்கு முன் விபத்துக்குள்ளான வயோதிபப் பெண் ஒருவர், வைத்தியசாலையில் சிசிக்சை பெற்றுவந்த நிலையில் நேற்று சனிக்கிழமை (12) பிற்பகல் உயிரிழந்துள்ளார்.

கோப்பாய் தெற்கு பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய நாகராஜா இராஜபூவதி என்ற வயோதிப பெண்ணே உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த பெண் கடந்த வியாழக்கிழமை (10) கோப்பாய் தெற்கு பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு செல்வதற்காக, பருத்தித்துறை வீதியை கடந்துள்ளார். அப்போது அவ்வழியே வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

அதன் பின்னர், அவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று சனிக்கிழமை (12) பிற்பகல் உயிரிழந்தார்.

குறித்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply