அமெரிக்காவின் ஹவாய் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது. மவுயி தீவில் 1,000 பேர் வரை காணாமல் போயுள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஹவாய் தீவுக் கூட்டங்கள் அமெரிக்க மாகாணங்களில் ஒன்றாக உள்ளது. இந்த தீவுக் கூட்டங்களில் ஒன்றான மவுயி தீவில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

அண்மையில் வீசிய சூறாவளிக் காற்று காரணமாக ஏற்பட்ட காட்டுத் தீ, மவுயி தீவின் நகர்ப்பகுதிக்கும் பரவியது. இந்த காட்டுத்தீயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது, சுமார் 1,000 பேர் காணமால் போயுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கு கடற்கரையில் உள்ள சுற்றுலா நகரமான லஹைனா பெருமளவில் தீக்கிரையாகி உள்ளது. சுமார் 1,700 கட்டிடங்கள் வரை தீயில் சேதமடைந்துள்ளதாக அந்தத் தீவின் ஆளுநர் ஜோஷ் க்ரீன் தெரிவித்துள்ளார்.

இந்த காட்டுத் தீ அனைத்து இடங்களிலும் பரவி நரகத்தை போல் காட்சியளிப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். பலர் தீயில் இருந்து தப்பிக்க கடலில் குதித்து தங்கள் உயிரை காத்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

 

Share.
Leave A Reply