நீல மாணிக்கக்கல் ஒன்று இலங்கை வரலாற்றில் அதிகூடிய விலைக்கு ஏலம் போயுள்ளது.

கஹவத்தை – கட்டாங்கே பகுதியில் உள்ள மாணிக்கக்கல் சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட நீல மாணிக்கக்கல்லே 43 கோடி ரூபாய்க்கு அதிகூடிய விலைக்கு விற்கப்பட்டுள்ளது.

இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் மேற்பார்வையில் கஹவத்த பிரதேசத்தில் இந்த விலைமதிப்பற்ற நீலக்கல் நேற்று புதன்கிழமை (16) ஏலம் விடப்பட்டுள்ளது.

குறித்த நீல மாணிக்கக்கல் ‘நீல மாணிக்க’ வகை இரத்தினக்கல் எனவும் 99 கரட் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வாரம் கஹவத்தை நகரை அண்மித்த கட்டாங்கே பிரதேசத்தில் உள்ள சுரங்கம் ஒன்றில் கற்கள் தோண்டியபோது இந்த பெறுமதியான நீல மாணிக்கம் கண்டுபிடிக்கப்பட்டது.

பாலமடுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவரினால் 43 கோடி ரூபாய்க்கு இந்த மாணிக்கக்கல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply