ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போதுவரை உலகம் முழுவதும் ஜெயிலர் படம் 375 கோடி வசூலை கடந்துள்ளாக கூறப்படுகிறது.

முன்னணி நடிகரான ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தின் வசூல் நிலவரம் குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது படத்தில் இதுவரை வசூல் குறித்து தயாரிப்பு நிறுவனம் அறிவித்துளளது.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தயாரான ஜெயிலர் திரைப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த ஆகஸ்ட் 10-ந் தேதி வெளியான ஜெயிலர் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போதுவரை உலகம் முழுவதும் ஜெயிலர் படம் 375 கோடி வசூலை கடந்துள்ளாக கூறப்படுகிறது.

‘ஜெயிலர்’ திரைப்படத்திற்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன், விஜய் என பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர்.

இதனிடையே படம் வெளியானி ஒரு வாரம் கடந்துள்ள நிலையில் படத்திற்கு வரவேற்பு சற்றும் குறையாமல் அதே அளவில் உள்ளது. இதனால் நாளுக்கு நாள் வசூல் அதிகரித்து வரும் நிலையில், ஜெயிலர் திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ வசூல் நிலவரம் குறித்து தற்போது தகவல் வெளியாகி வருகிறது.

அதன்படி ஜெயிலர் வெளியான ஒரே வாரத்தில் ரூ.375.40 கோடியை கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.

நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். ஏற்கனவெ ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார், அண்ணாத்த உள்ளிட்ட படங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத நிலையில், ஜெயிலர் படம் பழைய ரஜினியை மீண்டும் கொண்டு வந்துள்ளதாக அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அதேபோல் ரஜினிகாந்த் நடிப்பில் ஏற்கனவே வெளியான கபாலி படத்தின் தயாரிப்பாளர் தாணு படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் நிலவரம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

Share.
Leave A Reply