மலேசியாவின் நெடுஞ்சாலையில்இறங்கமுற்பட்ட சிறிய ரகவிமானமொன்று கார் மோட்டார்சைக்கிள் மீது விழுந்து நொருங்கியதில் பத்துபேர் உயிரிழந்துள்ளனர்.

சிறியரகவிமானத்தில் 8பேர் பயணித்துள்ளனர்.செலங்கூரின் நெடுஞ்சாலையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சிறியரகவிமானம் விமானகட்டுப்பாட்டு கோபுரத்துடன் தொடர்பை இழந்த நிலையில் காணப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானத்திலிருந்து அவசர அழைப்பு எதுவும் வெளியாகவில்லை விமானம் தரையிறங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்

கறுப்புபெட்டியை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

விசாரணைகள் இடம்பெறுவதால் காரணத்தை தெரிவிக்க முடியாது உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் நடவடிக்கையில் தடயவியல் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த பகுதியில் பொறியலாளராக பணியாற்றும் ஒருவர் சத்தம் கேட்டதும் விமானம் காணப்பட்ட பகுதிக்கு சென்றவேளை காயமடைந்தவர்களை பார்த்ததாக தெரிவித்துள்ளார்.

விமானம் தாறுமாறாக பறந்ததை அவதானித்ததாக முன்னாள் மலேசிய விமானப்படைவீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply